இந்திய அணி வரலாற்று வெற்றி: திலக் வர்மாவின் அதிரடியில் வீழ்ந்த பாகிஸ்தான்...!
India wins the Asia Cup
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இன்று துபாயில் நடைப்பெற்றது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பல பரிட்சை நடத்தியது. அதன்படி, இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பகார் ஜமான் மற்றும் பர்கார் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், பர்கான் அரைசதமடித்து, 57 ரன்னில் ஆட்டமிழந்தார். பகார் ஜமான் மற்றும் பர்கார் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து களமிறங்கிய சைம் அயூப் 14 ரன்களிலும், பகார் ஜமானும் 46 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை மற்றும் பூஜ்ஜிய இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். 12 ஓவர்களில் 114-02 என சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி, அடுத்த 05 ஓவர்களில் 06 விக்கெட்டுகளை இழந்து வழமை போல திணறியது.
இறுதியில் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு சகல விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 04 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பும்ரா, அஸ்சர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 02 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 05 ரன்களில் ஆட்டமிழந்தார். கில் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் 01 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். சஞ்சு சாம்சன் 24 ரன்களிலும், சிவம் டூபே 33 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய திலக் வர்மா 53 பந்துகளில் 69 ரன்களை அதிரடி காட்டினார். ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 04 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
இறுதியில் இந்திய அணி, 19.0 ஓவரில் 02 பந்துகள் மீதமிருக்க 150 ரன்களை எடுத்து பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷாகின்ஷா அப்ரிடி 01 விக்கெட்டினையும், பாஹிம் அஸ்ரப் 03 விக்கெட்டுகளையும், அப்ரர் அஹமட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.