விஜய்யின் சென்னை நீலாங்கரை வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை..!
Bomb threat to Vijay Chennai Neelankarai house
நேற்றைய தினம் கரும் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது அங்கு குவிந்த கூட்டத்தால் நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 40 பேர் இதுவரை உயிரிழந்துள்ள சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.
தற்போது 50க்கும் மேற்பட்டோர் கரூர் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரது, சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமெயில் மூலமாகத் இந்த மிடற்றால் கடிதம் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்திற்குத் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கிய குழு, உடனடியாக நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டிற்கு விரைந்துள்ளதாக கூறப்பட்டது.

அங்கு மோப்ப நாய் உதவியுடன் சோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியானது.
நேற்று கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயர் சம்பவத்தில் உயிரிழப்புகள் தொடர்பான வழக்குகள் மற்றும் அரசியல் விமர்சனங்களுக்கு விஜய் கடுமையாக ஆளாகியுள்ளார்.
இதற்கு மத்தியில் தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.இந்நிலையில், இந்த வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Bomb threat to Vijay Chennai Neelankarai house