வியட்நாமுக்கு நகர்ந்துள்ள புவலாய் புயல்: மத்திய பிலிப்பைன்சில் 20 பேர் உயிரிழப்பு: 23 ஆயிரம் குடும்பங்கள் நிர்க்கதி..!
Typhoon Puvalai kills 20 people in central Philippines
புவலாய் புயல் தாக்குதலால் பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்வேறு நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளதோடு, மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால்,மின் இணைப்பும் துண்டிக்கப்பட்ட்டுள்ளன. இந்த பொதுமக்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த புவலாய் புயல் காரணமாக, 23 ஆயிரம் குடும்பங்கள் புலம் பெயர்ந்து சென்றுள்ளதாகவும், 1,400 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த புயல் தாக்கத்தால் மத்திய பிலிப்பைன்சில் 20 பேர் வரை பலியாகியுள்ளனர்.

இதேநேரத்தில் குறித்த புவலாய் புயல் வியட்நாம் நோக்கி நகர்ந்துள்ளது. புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்ட்டுள்ளதால், வியட்நாமின் மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
புவலாய் புயலால் மணிக்கு 133 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என கூறப்படுகிறது. அந்நாட்டில் கனமழை பெய்து, அதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
English Summary
Typhoon Puvalai kills 20 people in central Philippines