பாம்பு கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண்: 54 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிர் தப்பிய திகில் அனுபவம்..!
Woman rescued after 54 hours after falling into snake well
சீனாவின் புஜியான் மாகாணத்தில் குவாங்சவ் நகரில் 48 வயது பெண் ஒருவர் வன பகுதியில் இருந்த கிணறு ஒன்றில் தவறி விழுந்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரிந்து இருந்ததால், நீந்தி கிணற்றின் சுவர் ஒன்றை பிடித்து கொண்டுள்ளார். ஆனால், அவரால் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை.
சுமார் 54 மணிநேரம் போராட்டத்திற்கு பின்னர் அவசரகால மீட்பு குழுவினர் அவரை கண்டறிந்து மீட்டெடுத்துள்ள சம்பவம் பரபரப்பாகியுள்ளது. தற்போது மிக சோர்வாக உள்ள அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த திகில் சம்பவம் குறித்து அவர் கூறுகையில், அந்த கிணற்றுக்குள் கொசுக்கள், தண்ணீர் பாம்புகள் சுற்றி சுற்றி வந்ததாகவும், கிணற்றின் சுவரில் பதிந்திருந்த கல் ஒன்றை கெட்டியாக பிடித்து கொண்டு இருந்ததாகவும், கிணற்றின் கிணற்றின் அடியில் கருப்பாக இருந்த நிலையில், அதில் சில தண்ணீர் பாம்புகள் நீந்தியபடி இருந்தன என்று கூறியுள்ளார்.
அத்துடன், அந்த பாம்புகளில் ஒன்று தன் கையை கடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அது, விஷமற்ற பாம்பு என்பதால் அவருக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். பல முறை தான் பிடித்து இருந்த சுவற்றின் பிடியை விட்டு விடலாம் என நினைத்த அவர், 70 வயது தாய், 80 வயது தந்தை மற்றும் கல்லூரி செல்லும் மகள் நினைவுக்கு வந்துள்ளதாகவும் கூறிய அவர், அவர்களை விட்டு சென்றால், அவர்கள் எப்படி பிழைப்பார்கள்..? என நினைத்து உறுதியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
English Summary
Woman rescued after 54 hours after falling into snake well