ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவின் வெற்றி இலக்கு 147 ரன்கள்..!
Indias target for victory in the Asia Cup final is 147 runs
கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பல பரிட்சை நடத்தி வருகிறது. அதன்படி, இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பகார் ஜமான் மற்றும் பர்கார் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இதில், பர்கான் அரைசதமடித்து, 57 ரன்னில் ஆட்டமிழந்தார். பகார் ஜமான் மற்றும் பர்கார் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தனர்.
ஆசிய
அடுத்து களமிறங்கிய சைம் அயூப் 14 ரன்களிலும், பகார் ஜமானும் 46 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை மற்றும் பூஜ்ஜிய இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். 12 ஓவர்களில் 114-02 என சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி, அடுத்த 05 ஓவர்களில் 06 விக்கெட்டுகளை இழந்து வழமை போல திணறியது.
இறுதியில் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு சகல விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 04 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பும்ரா, அஸ்சர் படேல் மற்றும் வருண்சக்கரவர்த்தி தலா 02 விக்கெட்டுகளைகைப்பற்றினர். இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
English Summary
Indias target for victory in the Asia Cup final is 147 runs