சுத்தமான சுவாசம் அவசியம்... இன்று உலக ஆஸ்துமா தினம்.!! - Seithipunal
Seithipunal


உலக ஆஸ்துமா தினம் :

உலக ஆஸ்துமா தினம் மே மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க்கிழமை (மே 4) அனுசரிக்கப்படுகிறது.

ஒருவருக்கு தொடர்ந்து சளி பிடித்தால் அவர்களுக்கு 50 முதல் 70 சதவீதம் வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. மேலும் இந்த நோயினால் உலகம் முழுவதும் 30 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர்.

சிகரெட் புகை, காற்று மாசுபாடு, பாஸ்ட்புட், வாசனை திரவியம் பூசுதல் போன்ற காரணங்களால் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் 1998ஆம் ஆண்டுமுதல் கடைபிடிக்கப்படுகிறது.

சர்வதேச தீயணைக்கும் படையினர் தினம் :

மே 4ம் தேதி சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

அவர்களை நினைவுக்கூறுவதற்காக உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4ஆம் தேதி சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாகப் பின்பற்றப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world ashma day 2021


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal