3 தசாப்தத்திற்குள் செவித்திறனை இழக்க வாய்ப்பு - உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


உலகளவில் செவித்திறன் பிரச்சனை காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலருக்கும் பல்வேறு பாதிப்புகள் காரணமாக காது கேட்கும் திறன் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. 5 பேரில் ஒருவருக்கு செவித்திறன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 2050 ஆம் வருடத்திற்குள் உலக மக்கள் தொகையில் நான்கு பேரில் ஒருவருக்கு செய்வித்திறன் பிரச்சனை ஏற்பட்டு இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. செவித்திறன் பிரச்சனையை சரிவர கவனிக்காததால், இந்த மாற்றம் ஏற்படும் என்றும் கூறியுள்ளது.

வரும் 3 தசாப்தங்களில் (30 வருடம்) செவித்திறன் குறைபாடுடையவர்களின் எண்ணிக்கை ஒன்றரை மடங்கு அதிகரிக்கும் என்றும், 2050 ஆம் வருடத்திற்குள் 700 மில்லியன் மக்களுக்கு சிகிச்சை தேவைப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

குறைந்த அளவு வருமானம் வரும் நாடுகளில் உள்ள குறைந்த மருத்துவர்கள் காரணமாக 80 விழுக்காடு பேர் செவித்திறன் பாதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். பணக்கார நாடுகளில் கூட செவித்திறன் பிரச்சனை உள்ளது. இதனை கவனிக்காத பட்சத்தில் எதிர்வரும் காலங்களில் செவித்திறனை பலரும் இழக்க வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

WHO Warn about Hear Problem


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->