வான்வெளியில் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பால் சீன உளவு பலூன் சிக்கியது - வெள்ளை மாளிகை - Seithipunal
Seithipunal


அதிபர் ஜோபைடன் நிர்வாகத்தில் வான்வெளியில் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பால் சீன உணவு பலூன் கண்டுபிடிக்கப்பட்டது என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் அமெரிக்கா மவுண்டானா மாகாணத்தின் கஸ்ஹடி நகரில் அமைந்துள்ள விமானப்படை தளத்தில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்தின் வான்பரப்பில் வெள்ளை நிறத்தில் மர்ம பலூன் ஒன்று பறந்தது. இதையடுத்து இந்த பலூன் சீன உளவு பலூன் என்றும், சீனா இந்த ரகசிய உளவு பலூனை அணு ஆயுத ஏவுதளத்தின் ரகசிய தகவல்களை சேகரிக்க அனுப்பியதாக குற்றச்சாட்டுகள் எழுந்து, இந்த பலூன் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவையடுத்து சீன உளவு பலூன் அட்லாண்டிக் கடல்பரப்பில் பறந்தபோது அமெரிக்க போர் விமானங்கள் ஏவுகணை மூலம் பலூனை சுட்டு வீழ்த்தின. இந்நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்டு அட்லாண்டிக் கடலில் விழுந்த உளவு பலூனை அமெரிக்க கடற்படை மற்றும் கடலோர காவல் படைகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சீன உளவு பலூனை கைப்பற்றினர். மேலும் பலூனிலிருந்த கருவிகளின் சிதறல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து எஞ்சிய பாகங்களை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளின் சிதறல்களை ஆய்வு செய்ததில் அது உளவு பலூன் என்றும், உளவு பலூனை சீனா அனுப்பியது சர்வதேச குற்றம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. 

இந்தநிலையில் சீன உளவு பலூன் விவகாரம் குறித்து, வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் கூறும்பொழுது, அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் வான் வெளி பகுதியில் கண்காணிப்பு பணிகள் மேம்படுத்தப்பட்டதால் சீனாவின் உளவு பலூன் கண்டுபிடிக்கபட்டதாகவும், இதற்குமுன் டிரம்ப் நிர்வாகத்தின்போது இது போன்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

White House says Improved surveillance caught Chinese spy balloon


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->