மலைப்பகுதியில் உருண்டு விழுந்த பேருந்து - பரிதாபமாக பறிபோன 24 உயிர்.!
twenty four peoples died for accident in peru country
மலைப்பகுதியில் உருண்டு விழுந்த பேருந்து - பரிதாபமாக பறிபோன 24 உயிர்.!
தென் அமெரிக்க நாடான பெருவில் உள்ள அயகுச்சோவா என்ற பகுதியில் இருந்து ஹூகான்சாயோ என்ற பகுதிக்கு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அது மலைப்பகுதி என்பதால் அதிக கொண்டை ஊசி வளைவுகள் இருந்தன.
இந்த நிலையில் பேருந்து ஒரு வளைவில் திருப்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் பல அடி உயரத்தில் இருந்து உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து தாறுமாறாக நொறுங்கியது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட மொத்தம் 24 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்புப் படையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
twenty four peoples died for accident in peru country