நெய்வேலி அனல் மின் நிலையத்தில் தீ விபத்தில் ரூ.1 கோடி பொருட்கள் கடும் சேதம்..!
Goods worth Rs 1 crore damaged in fire at Neyveli Thermal Power Plant
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இன்று அதிகாலை டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குறித்த தீயினால் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனம் இயங்கி வருகிறது. என்எல்சி திறந்தவெளி சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு மின் உற்பத்தி வழங்கப்படுகிறது.

இன்று காலை அம்மேரி அருகில் உள்ள இரண்டாம் அனல் மின் நிலைய விரிவாக்கத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பரவியதால், அங்கிருந்த காப்பர் ஓயர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. உடனடியாக என்எல்சி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை போராடி அணைத்துள்ளனர். அப்போது என்எல்சி அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் யாரும் அங்கு பணியில் இல்லாததால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து என்எல்சி உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் காப்பர் கம்பிகள் உள்ளிட்ட சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
Goods worth Rs 1 crore damaged in fire at Neyveli Thermal Power Plant