ராஜ்பவன் தொகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு..எதிர்கட்சித் தலைவர்  சிவா தொடங்கிவைத்தார்! - Seithipunal
Seithipunal


ராஜ்பவன் தொகுதி திமுக சார்பில், அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார் முன்னிலையில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியை எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கிவைத்தார்.

கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கோடை வெய்யிலில் இருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு புதுச்சேரி முழுவதும் நீர் மோர் பந்தல் அமைத்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில், தொகுதி செயலாளர் மோகன் ஏற்பாட்டில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா கலந்துகொண்டு, நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, நுங்கு, கரும்புச்சாறு, வெள்ளரிப்பழம் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, விழுப்புரம் முன்னாள் நகர மன்ற தலைவர் திரு. ஜனகராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர்‌ லோகையன், பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், தொகுதி செயலாளர் சக்திவேல்,இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரெமி எட்வின், மாணவரணி துணை அமைப்பாளர் முத்தரசன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In the Rajbhavan constituency the water moratorium tent was opened The opposition leader Shiva inaugurated it


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->