300 நுகர்வோர் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதித்தது இலங்கை அரசு - Seithipunal
Seithipunal


கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சாக்லேட், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 300 பொருட்கள் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, சாக்லேட், ஷாம்பூ, வாசனை திரவியங்கள், ஒப்பனை பொருட்கள், கைகடிகாரங்கள், பிரஷர் குக்கர், குளிரூட்டிகள், இசைக்கருவிகள், மது உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

மேலும் இதற்கான சிறப்பு அறிவிப்பினை இலங்கை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு முன்பு கப்பலில் ஏற்றப்பட்டு, செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் இலங்கை வந்தடையும் பொருட்களுக்கு இந்த தடை பொருந்தாது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Sri Lankan government has banned the import of 300 products


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->