நர்சிடம்  சட்டையில்  பேனாவை தேடிய டாக்டர் .. பாலியல் லீலைகள் அம்பல படுத்திய பெண்கள்! - Seithipunal
Seithipunal


பாதிக்கப்பட்ட அனைவரும் புதிதாக வேலைக்கு சேர்ந்த இளம்பெண்கள். அவர்களில் 2 பேர் வேலையை விட்டு சென்று விட்டனர்.

இங்கிலாந்து நாட்டின் பிளாக்பூல் விக்டோரியா மருத்துவமனையில் மூத்த இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிய வரும்  அமல் போஸ் என்பவர் கடந்த  5 ஆண்டுகளாக தனக்கு கீழ் பணியாற்றும் பெண் பணியாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார் என  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுபற்றி  கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது வருகிறது . இவருடைய பதவி மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றால் பயந்து போய் பலரும் இதனை வெளியே கூற முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.பாதிக்கப்பட்ட அனைவரும் புதிதாக வேலைக்கு சேர்ந்த இளம்பெண்கள். அவர்களில் 2 பேர் வேலையை விட்டு சென்று விட்டனர். 

அவர், பெண்களின் தோற்றங்களை பார்த்து வாட்ஸ்அப் குழுவிலும், பாலுணர்வை தூண்டும் வகையிலான பதிவுகளை வெளியிடுவார். சில பெண்களை கவர்ச்சியாக இருக்கிறாய் என கூறுவார்.

இதனால், புதிதாக பணிக்கு வருபவர்களிடம், அவரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்படும் என பெண் ஒருவர் கோர்ட்டில் கூறியுள்ளார். 2017 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் 5 பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார் என போசுக்கு எதிராக 12 குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன.

இதில் ஒரு பெண் தன்னுடைய வாக்குமூலத்தில், அவருடைய பாலியல் விருப்பத்திற்காக ஒவ்வொரு அந்தரங்க பகுதியையும் தொட்டார்என்று கூறியுள்ளார்.அந்த வலியை எதிர்கொள்ள முடியாமல், என்னையே காயப்படுத்தி கொள்கிறேன் என்று கூறினார்.

ஒரு முறை போசிடம் கையெழுத்து வாங்க பெண் பணியாளர் சென்றிருக்கிறார். அப்போது, பெண்ணின் சட்டை பகுதியை பிடித்து, அழுத்தியுள்ளார். பின்னர், பேனாவை தேடினேன் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி இயான் அன்ஸ்வொர்த், பாதிக்கப்பட்டவர்களை பற்றிய எந்த வருத்தமோ, அதுபற்றிய உணர்வோ போசுக்கு இல்லை. உங்களுடைய பதவியை பயன்படுத்தி, பல பெண்களிடம் பாலியல் துன்புறுத்தல்களை செய்து இருக்கிறீர்கள் என கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The doctor searched for a pen in the nurses coatWomen exposed by sexual acts


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->