15 இடத்தில் குண்டுகள்.. ஒருமாதம் வலியுடன் போரட்டம்.. இறுதியில் அரங்கேறிய துயரம்.! - Seithipunal
Seithipunal


தாய்லாந்து நாட்டில் இருக்கும் வனப்பகுதியில் 2 ஆயிரம் யானைகள் வசித்து வருகிறது. இவை அங்குள்ள அடர்ந்து காட்டிற்குள்ளும், அந்நாட்டின் தேசிய பூங்காவிலும் வசித்து வருகின்றன. தாய்லாந்து நாட்டில் பாதுகாக்கப்பட்ட விலங்காக யானைகள் உள்ள நிலையில், இதனை கொல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

யானையை யாரேனும் கொலை செய்தால், 3 வருட சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும். விளை நிலங்களில் அவ்வப்போது உணவுகளுக்காக யானைகள் புகுவதும், இதனை மக்கள் விரட்டி அனுப்புவதும் தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில், மர்ம நபரால் 15 துப்பாக்கி குண்டுகளை உடலில் வாங்கிய யானை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. யானையின் நுரையீரல், இதயம், குடல் போன்ற முக்கிய உறுப்புகளில் குண்டு பாய்ந்திருந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த யானை பரிதாபமாக இன்று உயிரிழந்தது. இந்த யானையை சுட்டுக்கொலை செய்த மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thailand Elephant died gun fire


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->