கட்டாய திருமணத்திலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு - தாலிபான் தலைவர் தகவல் - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்ததிலிருந்து தனது கடுமையான ஷிரியா கொள்கையின் படி பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதில் பெண் சுதந்திரம் மறுக்கப்பட்டு கல்வி, வேலை வாய்ப்பு என சமூக அடிப்படை உரிமைகளை பெண்களிடமிருந்து தலிபான்கள் பறித்துள்ளன.

இதனிடையே கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான அடக்குமுறைகளை நீக்கும் வரை தலிபான்கள் ஆட்சி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாது என ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா தூதர் ரோசா ஒடுன்பயேவா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளை தனது அரசாங்கம் எடுத்து வருவதாக தலிபான்களின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுந்த்சாதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தலிபான்கள் ஆட்சியில் கட்டாய திருமணம், பாரம்பரிய அடக்குமுறை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளில் இருந்து பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சுதந்திரமான மற்றும் கண்ணியமான மனிதராக பெண்களின் நிலை மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்றும், திருமணம், வாரிசுரிமை மற்றும் பிற உரிமைகளைப் பாதுகாப்பதில் பெண்களுக்கு தாலிபான் அமைப்புகள் கடமைப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Taliban leader says that Women protected from forced marriage in Afghanistan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->