இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தின விழா; அந்நாட்டு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்..! - Seithipunal
Seithipunal


இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தின விழாவை கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் குறைந்த செலவில் நடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் இது பெருமையுடனும் கம்பீரத்துடனும் நடைபெற வேண்டும் என அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி நிலையில் உள்ளது. இந்நிலையில், குறைந்த செலவில் விழாவை நடத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என அந்நாட்டு அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டலுவல்கள் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற 77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வின் முதலாவது ஏற்பாட்டுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர்  இதனை தெரிவித்துள்ளார். 

கடந்த வருடம் சுதந்திர தின விழாவுக்காக அமைச்சு 107 மில்லியன் ரூபாவை செலவிட்டிருந்தது. இந்த வருட சுதந்திர தின விழா தொடர்பில் இயன்றளவு செலவுகளை குறைப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் சுதந்திர தின விழாவைக் காண பொதுமக்களுக்கு வாய்ப்பு அளிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sri Lanka s 77th National Independence Day Celebration


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->