தேடப்பட்டு வந்த 'ஆயுத சப்ளையர்' சலீம் பிஸ்டல் நேபாளத்தில் கைது: டில்லி அழைத்து வரப்பட்டு தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


தேடப்பட்டு வந்த குற்றவாளி, ஆயுத சப்ளையரான சலீம் பிஸ்டல் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தியா அழைத்து வரப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டில்லியில் உள்ள சீலம்பூரில் வசித்து வந்த சலீம் பிஸ்டல், இந்தியாவில் தேடப்படும் ஆயுத சப்ளையராக அறிவிக்கப்பட்டவர். பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்து அதிநவீன ஆயுதங்களை கடத்தி வந்த இவர், லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் ஹாஷிம் பாபா உள்ளிட்ட நிழல் உலக தாதாக்களுக்கு ஆயுதங்களை விற்றுள்ளார்.

அத்துடன், பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கு, தாவூத் இப்ராஹிம் தலைமையிலான, 'டி - கம்பெனி'க்கு உதவியது என, பல்வேறு குற்றச்சாட்டுகளில் சலீம் பிஸ்டல் பேர் இடம்பெற்றுள்ள நிலையில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

கடந்த, 2018-இல் டில்லியில் கைது செய்யப்பட்ட சலீம், ஜாமின் பெற்ற பின் தலை மறைவானார். இதையடுத்து, அவர் நேபாளத்தில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை அண்மையில் தகவல் தெரிவித்தது. அதன் அடிப்படையில், நேபாளம் சென்ற டில்லி சிறப்பு பிரிவு போலீசார், சலீம் பிஸ்டலை கடந்த 09-ஆம் தேதி கைது செய்துள்ளனர்.

நேற்று, டில்லிக்கு அழைத்து வரப்பட்ட சலீம் பிஸ்டல் டில்லி போலீஸ் சிறப்புப் பிரிவு அலுவலகத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  அவரிடம், பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ., உடனான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arms supplier Salim Pistol arrested in Nepal brought to Delhi for intensive interrogation


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->