ஆன்லைன் சூதாட்ட மோசடி வழக்கு: சுரேஷ் ரெய்னாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ள அமலாக்கத்துறை..!
Suresh Raina is being questioned by the Enforcement Directorate in connection with the online gambling fraud case
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, ஆன்லைன் சூதாட்ட மோசடி வழக்கு தொடர்பாக, டில்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
நாடு முழுதும் ஆன்லைன் சூதாட்ட செயலிகள் வாயிலாக சட்டவிரோதமாக, 2,000 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளமை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் 'பாரிமேட்ச்' என்ற சூதாட்ட செயலியை பயன்படுத்தி போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு பணமோசடி நடந்ததாக விசாரணை நடைபெற்று வருகிறது.
அதன்படி, ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

சுரேஷ் ரெய்னா '1எக்ஸ்பெட்' என்ற ஆன்லைன் சூதாட்ட செயலியின் விளம்பர துாதராக செயல்பட்டிருந்தார். அதனடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, டில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அவர் நேற்று ஆஜராகியுள்ளார்.
சட்டவிரோத பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்திய போது சூதாட்ட செயலி விளம்பரத்திற்கான ஒப்பந்த முறை, கட்டணத்தொகை என பல்வேறு தகவல்களை அதிகாரிகள் சுரேஷ் ரெய்னாவிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
English Summary
Suresh Raina is being questioned by the Enforcement Directorate in connection with the online gambling fraud case