அமெரிக்காவில் இந்து கோவிலில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவு கும்பல்: இந்திய துணைத் தூதரகம் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா கலிபோர்னியாவின் நியூவார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலிஸ்தானி பிரிவினைவாதி ஜர்னைல் சிங் பிந்ரன்வாலே-வை புகழ்ந்தும், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் மற்றும் கிராஃபிட்டிகள் கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் வரையப்பட்டுள்ளன. இதை கவனித்த கோயில் நிர்வாகிகள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் உடனடியாக வந்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு குறித்து, பதிலளித்த நியூவார்க் காவல் துறை, இது வெறும் ஒரு சாதாரண நாசவேலைச் செயல் மட்டுமல்ல, என்றும், வேண்டுமென்றே குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்திய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் இத்தகைய செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் இந்து கோவில்கள் தாக்கப்படுவது இந்த ஆண்டில் மட்டும் இது நான்காவது முறை ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pro Khalistan mob attacks Hindu temple in US: Indian Consulate condemns


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->