ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள், உலக சாதனை படைத்த தென்னாபிரிக்க பெண்மணி!  - Seithipunal
Seithipunal


கோசியாம் தாமரா சித்தோல் தென்னாப்பிரிக்க பெண் எகுர்ஹுலேனி நகரில் உள்ள தெம்பிசாவைச் சேர்ந்தவர். அவருக்கு பிரிட்டோரியா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவம் நடந்தது. அவர் ஒரே நேரத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். 10 பிள்ளைகளில் ஏழு ஆண் பிள்ளைகளையும். மூன்று பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். 

கடந்த மே மாதத்தில் மாலியைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸே என்ற பெண்மணி ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்தது சாதனையாக அமைந்த நிலையில், தற்போது அந்த சாதனை ஒரே மாதத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

கோசியாம் கர்ப்பமாக இருந்த போது, அவருக்கு ஆறு குழந்தைகள் பிறக்கலாம் என எதிர்பார்த்ததாகவும், பின்னர், ஸ்கேன் மூலம் எட்டு குழந்தைகள் இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இரண்டு கணிப்புகளும் பொய்த்து 10 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இது புதிய கின்னஸ் புத்தக சாதனையை படைத்துள்ளது.

பிரசவ நேரத்தில் குழந்தைகள் வளர்ச்சி இல்லாமல் பிறந்ததால் ஒரு கவலை இருந்தது, ஆனால் 10 குழந்தைகளும் சில நாட்கள் இன்குபேட்டர்களில் வைக்கப்பட்டு பின்னர் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் அந்த குழந்தைகளின் தந்தை, டெபோஹோ சோடெட்சி. இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே ஆறு  வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

south African girl delivered 10 babies in one pregnancy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->