ஆட்டை இறையாக்கத் துடிக்கும் மலைப்பாம்பு.! பாம்புக்கு பதிலடி கொடுத்த சிறுவர்கள்.! - Seithipunal
Seithipunal


பொதுவாக பாம்பு என்றாலே மக்களுக்கு பெரிய அச்சமாக இருக்கும். பாம்புகளில் நிறைய வகைகள் உள்ளன. அதிலும் மலைப்பாம்புகள் மிகவும் ஆபத்தான ஒன்று. இந்த மலை பாம்புகள் பிற பாம்புகளை போல் இல்லாமல், இரையைக் கொல்வதற்கு தனது ஒட்டுமொத்த உடல்சக்தியையும் பயன்படுத்துகின்றது.

இந்த பாம்பு, ஒரு இறையை கண்டால், அதனை கொள்வதற்காக தனது பெரிய உடலை பயன்படுத்தி இறையை முழுவதுமாக சுற்றிக்கொண்டு, அந்த இறையை இறுக்குவதன் மூலம் அந்த இறைக்கு வலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த பிறகு அதனை அப்படியே முழுவதுமாக உண்கிறது. 

பெரும்பாலும் இந்த மலைப்பாம்புகளிடம் ஆடு, கோழி, பன்றி உள்ளிட்ட உயிரினங்கள் சிக்கிக்கொள்கின்றன. அந்த வகையில், மலைப்பாம்பு ஆடு ஒன்றை விழுங்குவதற்காக அதனை சுருட்டிய நிலையில், சிறுவர்கள் சிலர் அந்த ஆட்டினை காப்பாற்றியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவை வாஜே என்பவர் தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் மலைப்பாம்பு ஒன்று ஒரு ஆட்டினை இறையாக்குவதற்காக  சுருட்டிக்கொள்கிறது. அந்த பாம்பிடம் இருந்து விடுபடுவதற்காக அந்த ஆடு தன்னோடு பாம்பையும் சேர்த்துக்கொண்டு ஓடுகிறது. 

பின்னர் வலி தாங்க முடியாமல், ஆடு கத்திய நிலையில், அருகில் இருந்த சிறுவர்கள் சிலர் ஓடிவந்து பாம்பிடம் இருந்து ஆட்டை மிட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒருவர் பாம்பின் தலையையும், மற்றொருவர் அதன் வாலையும் பிடித்து இழுத்து ஆட்டினை பத்திரமாக மீட்டனர். 

இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் சிலர், சிறுவர்களின் துணிச்சலை பாராட்டியும், மற்றும் சிலர், வீடியோ எடுப்பதற்காக சிறுவர்கள் வேண்டுமென்றே இதனை அரங்கேற்றியுள்ளனர் என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

snake try to kill goat for food


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->