#BREAKING | கஞ்சா கடத்திய தமிழனை தூக்கிலிட்டு தண்டனை கொடுத்த சிங்கப்பூர் அரசாங்கம்! - Seithipunal
Seithipunal



கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூர் சிறையில் இருந்த தமிழரான தங்கராஜ் சுப்பையாவை இன்று தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது அந்நாட்டு அரசாங்கம். 

சிங்கப்பூர் நாட்டில் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. உட்சபட்சமாக மரணதண்டனை வழங்கப்படுகிறது.

இந்த கடுமையான சட்டத்திற்கு உலக அளவில் எதிர்ப்புகள் எழுந்ததன் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை அந்நாட்டு அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருந்தது.

இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட தமிழரான தங்கராஜு சுப்பையா என்பவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்தது.

இந்த மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தன்னார்வ அமைப்புகளின் கோரிக்கை வைத்த நிலையில், இதனை நிராகரித்த சிங்கப்பூர் நாட்டு அரசு சற்றுமுன் தங்கராஜ் சுப்பையாவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றி உள்ளது.

ஒரு கிலோ கஞ்சா கடத்தியதற்காக கைதாகி 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த நிலையில், தற்போது தங்கராஜ் சுப்பையாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Singapure Ganja Case Thngaraj Death penalty


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->