சமந்தா ரூட்டை பிடிச்ச கீர்த்தி சுரேஷ்!ரூ.1.5 கோடிக்கு ஒரே ஒரு பாடலா? 'தி பாரடைஸ்' படத்தில் கீர்த்தி சுரேஷின் சர்ப்ரைஸ் என்ட்ரி?
Keerthy Suresh follows in Samantha footsteps 1 point 5crore for just one song Is Keerthy Suresh making a surprise entry in the film The Paradise
திருமணத்திற்குப் பிறகும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது அவரது கைவசம் கண்ணிவெடி, தோட்டம், ரௌடி ஜனார்தனா, சத்யமணி சாவித்திரி உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.
இந்த நிலையில், தெலுங்கு நடிகர் நானி நடிக்கும் 'தி பாரடைஸ்' திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
திரையுலக வட்டாரங்களில் வெளியாகும் தகவலின்படி, இந்த ஒரே பாடலுக்காக கீர்த்தி சுரேஷுக்கு சுமார் ரூ.1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதுகுறித்து படக்குழு தரப்பில், கீர்த்தி சுரேஷ் சிறப்பு பாடலில் இடம்பெறுவது உண்மை என்றாலும், அவரது சம்பளம் தொடர்பான தகவல்கள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக புஷ்பா திரைப்படத்தில் சமந்தா நடித்த "ஊ சொல்றியா மாமா..." பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதுபோலவே, தி பாரடைஸ் படத்தில் இடம்பெறும் கீர்த்தி சுரேஷின் சிறப்பு பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியாகவுள்ள தி பாரடைஸ் திரைப்படத்தில் இந்த பாடல் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என்ற பேச்சும் திரையுலகில் நிலவி வருகிறது. இருப்பினும், கீர்த்தி சுரேஷின் சம்பளம் மற்றும் பாடல் குறித்த முழு விவரங்கள் தொடர்பாக படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
English Summary
Keerthy Suresh follows in Samantha footsteps 1 point 5crore for just one song Is Keerthy Suresh making a surprise entry in the film The Paradise