தமிழக வேளாண் பட்​ஜெட்; விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க ரூ.2 கோடியில் 'உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்' அறிமுகம்..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்​டப்​பேர​வை​யில் 2026-27-ம் நிதி ஆண்டுக்​கான வேளாண் பட்​ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று (ஆக.6) தாக்கல் செய்து, உரை நிகழ்த்தினார். இதில், விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க ரூ.2 கோடியில் 'உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்'உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் மூலம் விவசாயிகளுக்குக் சரியான நேரத்தில் கிடைக்கும் தகவல், பெய்யும் மழைக்கு நிகர் என்பதை உணர்ந்துதான் விவசாயிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தி மண் வளம் மற்றும் பயிர் சாகுபடி குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.

அதன்படி, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழி கற்றலுக்கு உரிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, வானிலை முன்னறிவிப்பு, மண் நலம் மற்றும் மண் வளம், பூச்சி, நோய் மேலாண்மை, பருவ நிலைக்கு ஏற்ற பயிர் என, விதைப்பு முதல் அறுவடை வரையிலான அனைத்துத் தொழில்நுட்ப ஆலோசனைகளும் சேவைகளும் இதன் மூலம் வழங்கப்படும் என கூறப்பட்டது.

அத்துடன், சந்தை நிலவரம், குரல் வழி வேளாண் சேவைகள், அனைத்து அறிவுசார் வேளாண் சேவைகளையும் விவசாயிகள் தங்களது கைப்பேசி வாயிலாக எளிதாகப் பெறும் வகையில். 2026-27 ஆம் ஆண்டில் 'உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்' செயல்படுத்திட மாநில நிதியிலிருந்து 02 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmer Artificial Intelligence Project introduced at Rs 2 crore in Tamil Nadu Agriculture Budget


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->