மோட்​டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு; காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


நாட்​டில் உள்ள 30.05 கோடி வாக​னங்​களில் சுமார் 16.5 கோடி வாகனங்​களுக்கு காப்​பீடு இல்லை என்​றும், இதனால் விபத்​தில் பாதிக்​கப்​படு​பவர்​கள் இழப்​பீடு கிடைக்​காமல் அலைக்​கழிக்​கப்​படு​வ​தாக​வும் நீதிப​தி​கள் அதிருப்தி தெரி​வித்​துள்ளனர்.

மோட்​டார் வாகன விபத்து இழப்பீடு தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் சஞ்​சய் கரோல், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசாரணைக்கு வந்தது. அப்போது  அவ்​வழக்கை விசா​ரித்த நீதிபதிகள் அடங்​கிய அமர்வு கூறியதாவது;

முன்​ன​தாக, புதிய கார்​களுக்கு 03 ஆண்​டு​களுக்​கும், இருசக்கர வாக​னங்​களுக்கு 05 ஆண்​டு​களுக்​கும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டா​யம் என 2018-இல் உச்ச நீதி​மன்ற உத்​தர​வி்ட்​டது. 08 ஆண்​டு​கள் கடந்​தும் ஏராள​மான வாக​னங்​கள் காப்​பீடு இன்​றியே இயங்கி வரு​வதை நீதிப​தி​கள் சுட்​டிக்​காட்​டியுள்ளனர்.

இதனை சீரமைக்க, காப்​பீடு இல்​லாத வாக​னங்​களுக்கு எரிபொருள் வழங்​காத வகையி​லான மாதிரித் திட்​டத்தை மத்​திய சாலைப் போக்​கு​வரத்து அமைச்​சக​மும், 'ஐஆர்​டிஏஐ' அமைப்​பும் இணைந்து உடனடி​யாகச் செயல்​படுத்த வேண்டும் என நீதிப​தி​கள் உத்தரவிட்டுள்ளனர்.

அத்துடன், நாட்​டில் உள்ள 30.05 கோடி வாக​னங்​களில் சுமார் 16.5 கோடி வாகனங்​களுக்கு காப்​பீடு இல்லை என்​றும், இதனால் விபத்​தில் பாதிக்​கப்​படு​பவர்​கள் இழப்​பீடு கிடைக்​காமல் அலைக்​கழிக்​கப்​படு​வ​தாக​வும் நீதிப​தி​கள் அதிருப்தி தெரி​வித்​துள்ளனர்.

இதன்​படி, காப்​பீட்​டைப் புதுப்​பிக்​கும் வரை பெட்ரோல் பங்​கு​களில் எரிபொருள் வழங்​கப்​ப​டாது என்றும், இது அனைத்து வாக​னங்​களுக்​கும் காப்​பீட்​டைக் கட்​டாய​மாக்​கும் மோட்​டார் வாக​னச் சட்​டப் பிரிவு 146-ஐ உறுதி செய்​யும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், புதிய கார்​களுக்​கான காப்​பீட்டை 03-லிருந்து 04 ஆண்டுகளுக்​கும், இருசக்கர வாக​னங்​களுக்கு 05-லிருந்து 06 ஆண்டுகளுக்​கும் நீட்​டிக்க 'ஐஆர்​டிஏஐ' அமைப்​புக்​கு உத்தரவிடப்பட்​டுள்​ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court orders not to provide fuel to uninsured vehicles


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->