தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் 'தமிழ்நாடு குறுதானிய இயக்கம்' செயல்படுத்தப்படும்; வேளாண் அமைச்சர் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்​டப்​பேர​வை​யில் 2026-27-ம் நிதி ஆண்டுக்​கான வேளாண் பட்​ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று (ஆக.6) தாக்கல் செய்து, உரை நிகழ்த்தினார்.

இதில், குறுதானியங்களின் சாகுபடிப் பரப்பை இருமடங்காக அதிகரிக்கும் நோக்கில், 2026-27 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் 'தமிழ்நாடு குறுதானிய இயக்கம்' செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக மாநில நிதியிலிருந்து 07 கோடியே 1 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் கூறியதாவது;

அதிக சத்துக்களுடன் நிறைய மருத்துவ குணங்களையும் உள்ளடக்கிய சிறுதானிய உணவுப் பழக்கம் வீடுகளில் தொடங்கி உணவகங்கள் வரை பரவத் தொடங்கியுள்ளது. இவற்றின் தேவையைக் கருத்தில் கொண்டு, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில் 'தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

அத்துடன், 2026 27 ஆம் ஆண்டில், உழவர் குழுக்கள் அமைத்தல், மாற்றுப்பயிர் சாகுபடித் தொகுப்பு மானியம், சிறுதளைகள் விநியோகம், வேளாண் இயந்திர வாடகை மையங்கள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள் போன்ற இனங்கள், 63 கோடியே 81 லட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்றும். இத்திட்டத்தின் வாயிலாக, 11 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சிறுதானியப் பயிர் சாகுபடி செய்யும் 4 இலட்சத்து 75 ஆயிரம் விவசாயிகள் பயனடைவர் என்று குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்நாட்டில் வறட்சியைத் தாங்கக்கூடிய, குறைந்த நீர்த்தேவை கொண்ட, அதிக ஊட்டச்சத்து, நார்ச்சத்துடைய குறுதானியங்களான சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்றவை சராசரியாக 61 ஆயிரத்து 750 ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகின்றன என்று கூறினார்.

இந்நிலையில், குறுதானியங்களின் சாகுபடிப் பரப்பை இருமடங்காக அதிகரிக்கும் நோக்கில், 2026-27 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் 'தமிழ்நாடு குறுதானிய இயக்கம்' செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக, 7 கோடியே 1 லட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர் வினோத் கூறுகையில், புரதசத்து, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் ஆகியவை அதிகமாகவும், குளூட்டன், கிளைசிமிக் குறியீடு குறைவாகவும் உள்ள தானியப்பயிர்களான சீமைத் தினை, பாப்பரை மற்றும் குலசாமை ஆகிய பயிர்களைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தும் நோக்கில், அவற்றைச் சாகுபடி செய்வதற்கு உகந்த தட்பவெப்ப நிலை கொண்ட நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம் முதலிய மாவட்டங்களில், 30 லட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில், செயல்விளக்கத் திடல்கள் அமைக்கப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட் 2026-27 இல் உரையில் வேளாண் அமைச்சர் வினோத் குறிப்பிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Agriculture Budget announced that the Tamil Nadu Small Grains Movement will be implemented in 29 districts of Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->