பேஸ்புக்கில் தொடரும் ஆள்மாறாட்ட மோசடி: மெட்டா நிறுவனத்திற்கு சிங்கப்பூர் அரசு காலக்கெடு..!
Singapore government gives Meta deadline to respond to ongoing Facebook impersonation scam
பேஸ்புக் தளத்தில் நடக்கும் ஆள்மாறாட்ட மோசடிகளை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.தவறினால் சிங்கப்பூர் மதிப்பில் ஒரு பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் மெட்டா நிறுவனத்துக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
பேஸ்புக் சமூக வலைதளத்தில் போலியாக அக்கவுண்ட் உருவாக்கி, அதனை வைத்து ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபடுவதும் உலகம் முழுவதும் தொடர்கிறது. இதனை தடுக்கும் விதமாக சிங்கப்பூரில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்நாட்டின் அதிகாரிகள் பெயர்களில் உள்ள போலி கணக்குகள், விளம்பரங்கள், பக்கங்கள் போன்ற மோசடிகளை கட்டுப்படுத்த மெட்டா நிறுவனத்துக்கு சிங்கப்பூர் அரசு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது.

அத்துடன், ஆள்மாறாட்டத்தை தடுக்க முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இந்த தடுப்பு நடவடிக்கையை செப்டம்பர் 30க்குள் எடுக்கவேண்டும் என்றும் காலக்கெடு விதித்துள்ளது. அவ்வாறு தவறினால், ஒரு மில்லியன் சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.6.88 கோடி) அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்பிறகும் மோசடி தொடரும் பட்சத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு லட்சம் சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
English Summary
Singapore government gives Meta deadline to respond to ongoing Facebook impersonation scam