ஷேக் ஹசீனாவால் வங்கதேசம் -இந்தியா இடையே பிரச்சினை: பலி சுமத்தும் முகமது யூனுஸ்..!
Mohammad Yunus accuses Sheikh Hasina of being a victim of the problem between Bangladesh and India
'முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அந்நாட்டில் மாணவர் போராட்டத்தையடுத்து பதவி விலகி, இந்தியாவில் தஞ்சம் புகுந்து வசித்து வருகிறார். அவர் இவ்வாறு இந்தியாவில் உள்ளது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தையும், பிரச்னையையும் உருவாக்குவதாக அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் அவர் பேசும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியுள்ளதாவது:
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு வழிவகுத்த கடந்த ஆண்டு போராட்டங்களை இந்தியா விரும்பவில்லை. இதனால், இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே உறவுகள் விரிசல் அடைந்துள்ளது. மாணவர்கள் செய்தது இந்தியாவுக்குப் பிடிக்காததால் தற்போது எங்களுக்கு அவர்களுடன் பிரச்னைகள் உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஷேக் ஹசீனா இந்தியாவில் வசித்து வருவதால், இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தையும், பிரச்னையையும் உருவாக்குகிறத என்றும், பிரச்னைகளை உருவாக்கிய ஷேக் ஹசீனாவை இந்தியா வரவேற்கிறது என்றும், ஹசீனாவின் அறிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்களை மோசமாக்கியுள்ளன என்று குற்ற சுமத்தியுள்ளார்.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்ற பிறகு ஹசீனா மற்றும் பிற அவாமி லீக் தலைவர்களுக்கு எதிராக ஏராளமான குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது. அத்துடன், இந்தியா, வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறைந்துள்ளது.
இதேவேளை, வங்கதேச சுதந்திரப் போராட்டம் நடந்த போது, பல்வேறு சித்ரவதைகள் செய்து மக்களை கொன்ற பின்னணி கொண்ட பாகிஸ்தானுடன் முகமது யூனுாஸ் நட்புறவு பாராட்ட தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Mohammad Yunus accuses Sheikh Hasina of being a victim of the problem between Bangladesh and India