‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ கொண்டாட்ட விழா: மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார்..!
Revanth Reddy inaugurates Best Tamil Nadu in Education celebration along with MK Stalin
25-2026-ஆம் கல்வி ஆண்டிற்கான 'புதுமைப்பெண் - தமிழ்ப் புதல்வன்' திட்டங்களின் தொடக்கவிழா இன்று மாலை 05 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் கருப்பொருளில் கொண்டாடப்பட்ட இந்த விழாவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்துகொண்டு இரு திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இந்த விழாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். குறித்த இரு திட்டங்களின் மூலம் 2.57 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த விழா கல்வி சார்ந்த 05 முக்கிய திட்டங்களையும், சாதனைகளையும் முன்னிலையாக வைத்து 07 பகுதிகளாக பிரித்து நடத்தப்பட்டது.

முதல் பகுதியாக 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' அதனைத் தொடர்ந்து 'நான் முதல்வன்', 'விளையாட்டுச் சாதனையாளர்கள்', 'புதுமைப் பெண்-தமிழ்ப் புதல்வன்' மற்றும் 'அரசுப் பள்ளிகளில் இருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற சாதனையாளர்கள்' என்று அடுத்தடுத்து நடைபெற்றது.
குறித்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்களான கீதா ஜீவன், கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் டாக்டர் மா.மதிவேந்தன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நடிகர் சிவக்குமார், சிவகார்த்திகேயன், இயக்குநர் மிஸ்கின், தமிழரசன், பச்சமுத்து என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
English Summary
Revanth Reddy inaugurates Best Tamil Nadu in Education celebration along with MK Stalin