வச்சான் பாரு பாகிஸ்தானுக்கு ஆப்பு., கொண்டாட்டத்தில் இந்தியா!
saudi 20 riyal currency
சவுதி அரேபியா நாடு நேற்று வெளியிட்டுள்ள புதிய ரூபாய் நோட்டில், பாகிஸ்தான் வரைபடத்தில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் பகுதிகளை நீக்கி உள்ளது. இது பாகிஸ்தான் நாட்டுக்குப் பெரும் அதிர்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

சவுதி அரேபியா நாடு உலக வரைபடம் அச்சிடப்பட்ட இருபது ரியால் கரன்ஸி நோட்டை நேற்று வெளியிட்டது. அந்த 20 ரியால் கரன்சி நோட்டில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் பாகிஸ்தான் பகுதிகள் நீக்கப்பட்டு உள்ளன.
இது தற்போது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் பாகிஸ்தான் நாட்டில் உள்ளவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "சவுதி அரேபியா பாகிஸ்தான் வரைபடத்திலிருந்து அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்திஸ்தான் பகுதிகளை நீக்கி உள்ளது. இது இந்தியாவுக்கு சவுதி அளித்துள்ள தீபாவளி பரிசு" என்று தெரிவித்துள்ளார்.