95 ஆண்டுகால வரலாறு; நியூசிலாந்து தொடக்க ஜோடியான டாம் லாதம் - டெவான் கான்வே பிரமாண்ட சாதனை...!
New Zealands opening pair Tom Latham and Devon Conway achieve a remarkable feat
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் தோல்வியின் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியின் விளிம்பில் இருந்த நிலையில், போராடி டிரா செய்தது.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. கடைசி டெஸ்ட் போட்டி இரண்டு அணிகளுக்கும் இடையே நடந்து வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

போட்டியில் முதலில் பேட்டிங் தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 323 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளது. அணியின் கேப்டன் லாதம் 137 ரன்கள் குவித்து 15-வது டெஸ்ட் சதத்தையும், கான்வே 178 ரன்கள் குவித்து தனது ஆறாவது சதத்தையும் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க ஜோடி என்ற பிரமாண்ட சாதனையை படைத்துள்ளனர்.
இதற்கு முன்னதாக 2019ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க ஜோடியாக ரோஹித் சர்மா-மயங்க் அகர்வால் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் அடித்ததிருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது இச்சாதனையை நியூசிலாந்து ஜோடி டாம் லதாம் - டெவான் கான்வே முறியடித்துள்ளனர். மேலும் இச்சாதனை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க ஜோடியாக அடிக்கப்பட்ட பார்ட்னர்ஷிப்-ல் 12-வது இடத்தை பிடித்துள்ளது.

நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க ஜோடியாக முதலிடத்தில் 1972-இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் கிளென் டர்னர் மற்றும் டெர்ரி ஜார்விஸ் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 387 ரன்கள் சேர்த்தனர். இது முதல் விக்கெட்டுக்கு 300 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் நியூசிலாந்து தொடக்க ஜோடி ஆகும்.
இதற்கு முன்பு 1930-இல் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தின் டம்ப்ஸ்டர்- மில்ஸ் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்து இருந்தனர். 95 ஆண்டுகால சாதனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
English Summary
New Zealands opening pair Tom Latham and Devon Conway achieve a remarkable feat