ஏர் இந்தியா விமானத்தில் வலம் வந்த பாம்பு - டிசிஜிஏ விசாரணை செய்ய உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சர்வதேச விமான சேவையை அளிக்கும் பிரபல நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் அனைத்து நாட்டிற்கும் விமான சேவையை அளித்து வருகிறது. அந்த வகையில், நேற்று கேரளாவில் உள்ள கோழிக்கோட்டிலிருந்து புறப்பட்ட B737-800 என்ற விமானம் துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அப்போது விமானத்தின் சரக்கு கிடங்கில் இருந்து பாம்பு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். இதைத் தொடர்ந்து, விமானத்தில் உள்ள தீயணைப்புத்துறையினர் விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த சம்பவம் குறித்து டிசிஜிஏ விசாரணை செய்ய உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, துபாயிலிருந்து கோழிக்கோடு வருவதற்காக காத்திருந்த பயணி ஒருவர், "துபாய் விமான நிலையத்தில் சுமார் ஏழு மணிநேரம் சிக்கித் தவிப்பதாக" டுவிட்டரில் பதிவிட்டார். 

அதற்கு பதிலளித்த ஏர் இந்தியா நிறுவனம், "IX344 துபாய்-கோழிக்கோடு விமானம் 11 டிசம்பர் அதிகாலை 1:45 மணிக்குப் புறப்படும்" என்று தெரிவித்து, "உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு வருந்துகிறோம். நீங்கள் ஓட்டலுக்கு மாற்றப்பட்டிருக்கிறீர்கள்" என்று பதிவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sanke found in air india airplane dcga investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->