உக்ரைன் போரில் 50 ஆண்டுகால பழமையான பீரங்கிகளை ரஷ்யா பயன்படுத்த உள்ளதாக தகவல்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்றின.

இதனால் பெரும்பாலான இடங்களில் ரஷ்ய படைகள் பின்வாங்கியுள்ளதால், வீரர்களை அணி திரட்டுவதற்கான முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மீதான போர் தொடங்கியிலிருந்து இதுவரை 2254 நவீன பீரங்கிகளை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைனின் உள்துறை அமைச்சக ஆலோசகர் அன்டன் ஜெரஷ்சென்கோ தெரிவித்துள்ளார்.

மேலும் 1960ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட டி 62 பீரங்கிகளை ரயில் மூலம் ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்பட்ட காணொளியை வெளியிட்டு, 50 ஆண்டுகால பழமையான பீரங்கியை ரஷ்யா போர்க்களத்தில் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மிகப் பழமையான இந்த பீரங்கிகள் நவீன பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை தாங்க இயலாத நிலையில், இவற்றை வைத்து உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெற நினைக்கிறது என்று ஜெரஷ்சென்கோ கிண்டலடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia to use 50 yr old cannon in Ukraine war


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->