புதினை சந்தித்து பேச தயார்...! போரை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது...! - ஜெலன்ஸ்கி
Ready to meet with Putin There need to stop war Zelensky
கடந்த 3 ஆண்டுகளாக உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து வருகிறது.இதில் உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்காக ரஷ்யா மீது இன்னும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து வருகிறார்.

அதேசமயம், பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிருபர்களைச் சந்தித்தார்.
ஜெலன்ஸ்கி:
அப்போது அவர் தெரிவித்ததாவது,"போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்துப் பேச தயாராக இருக்கிறேன்.இதில் உக்ரைன் இந்தப் போரை ஒருபோதும் விரும்பவில்லை. மேலும் போரை தொடங்கிய ரஷ்யா தான் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
English Summary
Ready to meet with Putin There need to stop war Zelensky