குழந்தைகளுக்கு காசாவில் போலியோ சொட்டு மருந்து முகாம்! - Seithipunal
Seithipunal


கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் காசா பகுதிக்குள் கடத்திச் செல்லப்பட்டனர். இதனால் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. கடந்த 11 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த போரால் காசா பகுதியில் பாலஸ்தீனர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 40,000-க்கும் மேல் கடந்துள்ளது.

இந்நிலையில், போலி நோய் பாதிப்பு அண்மையில் காசாவில் முதல்முறையாக கண்டறியப்பட்டது. 10 மாத குழந்தை டைப் 2 போலியோவால் பாதிக்கப்பட்டு அந்த குழந்தையின் கால் செயலிழந்து போனது என்பதை உறுதிப்படுத்திய ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு, அந்த நோய்க்கான அறிகுறிகளே தென்படாமல் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் குறைந்தது 90 சதவீத குழந்தைகளுக்கு மிக அவசாரமாக போலி நோய் தடுப்புக்கான மருந்துகள் அளிக்க வேண்டும் என்றும் அப்படி அளிக்கப்படாவிட்டால் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்றும் பின்னர் பிராந்திய தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்தனர்.

இதனைத்தொடர்ந்து, போலியோ சொட்டு மருந்து முகாம் காரணமாக போரை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்டதை அடுத்து பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் மற்றும் ஐ.நா. சாா்பாக மத்திய காஸா, தெற்கு காஸா மற்றும் வடக்கு காஸா என 3 கட்டங்களாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என அறிவித்தது.

அதன்படி, மத்திய காஸாவில் ஞாயிற்றுக்கிழமை 6.40 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது மற்றும் வரும் நாள்களில் மற்ற பகுதிகளுக்குச் செல்லும் இந்த முகாம் வரும் 9-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த இடைநிறுத்தங்களை போர்நிறுத்தமாகக் கருதக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Polio drop camp for children in Gaza


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->