பாகிஸ்தான் அரசு பொருளாதார நெருக்கடியை குறைக்க கூட்டாளி நாடுகளிடம் உதவி கேட்டுள்ளதா...?
Pakistani government sought help from allied countries ease economic crisis
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் நாளுக்கு நாள் தீவிரமாக அதிகரித்து வருகிறது.இதனால், நேற்று இரவு முழுவதும் இந்திய பகுதிகளில் பாகிஸ்தானும், பாகிஸ்தான் பகுதிகளில் இந்தியாவும் டிரோன் தாக்குதல் நடத்தின.

இந்நிலையில்,ஏற்கனவே பொருளாதர ரீதியாக பாதிக்கப்பட்டு, பாகிஸ்தான் உலக வங்கி மற்றும் உலக நாடுகள் உதவி பெற்று வரும் சூழலில் இருக்கிறது. இதனால் தற்போது ஏற்பட்ட மோதல் பாகிஸ்தான் நாட்டுக்கு பெரிய அடியாக மாறியுள்ளது.இதன் காரணமாக இந்தியாவால் ஏற்பட்ட பெரும் இழப்புகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் அரசு நட்பு நாடுகளிடம் கூடுதல் கடன்களைக் கோருகிறது என்று தகவல் வெளியாகின.
மேலும், பாகிஸ்தான் அரசின் பொருளாதார விவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு:
அதில், "எதிரிகளால் ஏற்பட்ட பெரும் இழப்புகளுக்குப் பிறகு, சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடன்களுக்காக பாகிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுக்கிறது.அதிகரித்து வரும் போர் மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியில், சர்வதேச கூட்டாளிகள் பொருளாதார நெருக்கடியைக் குறைக்க உதவுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதை மறுத்துள்ள பாகிஸ்தான் அரசு, தங்கள் பொருளாதர அமைச்சகத்தின் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டு ( hack ) இருப்பதாக தெரிவித்துள்ளது.இந்தத் தகவல் உண்மையா? அல்லது கடன் கேட்டதை மறைக்கிறதா? என்பது தெரியவில்லை.
English Summary
Pakistani government sought help from allied countries ease economic crisis