பாகிஸ்தான் : மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 13 பேர் பலி.!
Pakistan bus accident 13 passengers death
பாகிஸ்தானில் மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூருக்கு பேருந்து ஒன்று ஏராளமான பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சால்ட் என்ற மலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது வளைவு ஒன்றில் திரும்பிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை விரைவாக மீட்டனர். இந்த கோர விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்ததில் ப்ரேக் செயலிழந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
English Summary
Pakistan bus accident 13 passengers death