டிக் டாக்கில்., காட்ட கூடாததை கட்டிய 4 பேர்! தட்டி தூக்கிய போலீஸ்! - Seithipunal
Seithipunal


கடந்த 2 மாதங்களுக்கு முன் இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டது. சமூகத்தில் பல குற்ற சம்பவங்களுக்கும், ஒழுக்கமற்ற செயல்களுக்கும் வித்திட்ட இந்த டிக் டாக் செயலி, இந்திய - சீன எல்லை போர் பதட்டத்தில் இந்திய பாதுகாப்பு நடவடிக்கையாக இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் டிக் டாக் வீடியோ ஒன்றில் ஆயுதம் மற்றும் வெடிப்பொருட்கள் உபயோகித்து வீடியோ வெளியிட்ட 4 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் நாட்டு போலீசார் தெரிவிக்கையில், "டிக் டாக் செயலியில் ஆயுதம் மற்றும் வெடிபொருட்கள் வைத்து நான்கு பேர் தொடர்ந்து காணொளி வெளியிட்டு வந்தனர்.

அவர்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தது. அவர்களை கைது செய்ய சுல்தான்பூர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், அந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பாகிஸ்தான் நாட்டின் ஆயுத சட்டங்களின்படி ஆயுதங்களை பொதுவெளியில் காண்பிப்பது குற்றமாகும். அப்படி காண்பித்தால் அந்த குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pak police arrest for tik tok violence


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal