வேறு வழியே இல்லை., கொரோனவுடன் பழகிக்கொள்ளுங்கள் - அதிரும் அமெரிக்க நாடு.! - Seithipunal
Seithipunal


கொரோனாவின் முதலாவது, இரண்டாவது அலையின் போதே அமெரிக்க நாட்டின் மக்கள் கடுமையாக பாதிக்கட்டனர்.

இந்நிலையில், உருமாறிய புதிய வகை ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டில்  மூன்றாவது அலை சுனாமி போல் தாக்கி கொண்டு இருக்கிறது. அந்நாட்டில் ஒரு நாளின் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் இந்த கொரோனா வைரஸ் உடன் வாழ பழகிக்கொள்ள அமெரிக்கா தயாராகி கொண்டிருக்கிறது என்று, அந்த நாட்டு அரசின் மூத்த மருத்துவ நிபுணர் மருத்துவர் ஆண்டனி பாசி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், "இந்த கொரோனா வைரஸை உலகில் இருந்து முற்றிலும் நீக்குவது என்பது, உண்மைக்கு மாறானது. அதே சமயத்தில் இந்த ஒமைக்ரான் வகை வைரஸ் அசாதாரணமாக உள்ளது.

இது பரிமாற்றத் திறன் இருப்பதால் ஒவ்வொருவரையும் அது நிச்சயம் பாதிக்கும். நோய் பரவல் அதிதீவிரமாக பரவிக் கொண்டிருந்தாலும், நாட்டிலுள்ள எல்லா மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிந்தாலும், அமெரிக்க நாடு இந்த வைரஸ் பாதிப்பை சமாளிக்கக் கூடிய அளவு உள்ளது.

இந்த கொரோனா வைரஸ் உடன் சேர்ந்து வாழ்வதற்கான வாசலை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். 

இந்த வைரஸை நாம் ஒழிக்க போவதும் இல்லை.., 
அதற்கான வழியும் இல்லை.., 

தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு அதன் காலக்கெடு வரை பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதன்பின்னர் அவர்களுக்கு நோய்த் தொற்றுக்கு எதிரான அந்த தடுப்பு திறன் குறைந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

omicron issue in usa


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->