அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு...! இன்று திமுக மற்றும் விசிக இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை...! - Seithipunal
Seithipunal


வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கணக்குகள் சூடு பிடித்துள்ளன. அதன்படி, திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையேயான இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று (மார்ச் 18) மாலை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பில் தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு, அதே நாளில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.முன்னதாக, தொல். திருமாவளவன் தலைமையிலான விசிக குழுவும், டி.ஆர். பாலு தலைமையிலான திமுக குழுவும் அண்ணா அறிவாலயம் வளாகத்தில் முதல்கட்ட ஆலோசனையை நடத்தியது.

அப்போது, போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை விசிக தரப்பு வழங்கியிருந்தது.முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது.

அதன்படி, இந்த முறை 5 தனித்தொகுதிகள் மற்றும் 3 பொதுத்தொகுதிகள் என மொத்தம் 8 இடங்கள் வழங்க திமுக தலைமை மனதிட்டம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anna Arivalayam Second round talks between DMK and VCK today


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->