ஆகா., ஓகோ., ஒபாமா! அய்யோ இவரா ட்ரம்ப்!  - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான உள்கட்சி தேர்தலில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். ஆனால் போதிய ஆதரவு இல்லாததால் தோல்வி அடைந்தார்.

கமலா ஹாரிஸ் தமிழகத்துக்கு நெருங்கிய தொடர்பு கொண்டவர், கமலா ஹாரிஸ்-யின் தாயார் பெயர் ஷியாமலா. இவர் 19 வயது வரை சென்னையில் தான் படித்தார். புற்றுநோய் நிபுணரான இவர் ஜமாத்தை சேர்ந்த தோனல்டு ஹாரிஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு கலிபோர்னியாவில் செட்டில் ஆகிவிட்டார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சியின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தனது வாழ்த்து செய்தியினை தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்து செய்தியில், "துணை அதிபரை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமான முடிவு. நீண்ட நாட்களாக கமலா ஹாரிஸை எனக்கு தெரியும். அவர் இந்த பதவிக்கு தயாராகியிருக்கிறார். அரசியல் சாசனத்தை காக்கும் வேலையில் எப்போதும் இருப்பதுடன், நீதி தேவைப்படும் மக்களின் பக்கத்தில் நிற்பதை, தனது அரசியல் வாழ்வு முழுவதும் செய்து வருபவர்” என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தனது வாழ்த்து செய்தியினை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, "கமலா ஹாரீஸ்க்கு ஜோ பிடென் வாய்ப்பு வழங்கியிருப்பது ஆச்சரியமாக இருப்பதாகவும், அவர் மோசமாக பணியாற்ற கூடியவர்" என்றும் தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்தை பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Obama talk about kamala harris


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->