மீண்டும் பிரதமர் ஆகும் ஜெசிந்தா ஆர்டெர்! உலக தலைவர்கள் வாழ்த்து!  - Seithipunal
Seithipunal


நியூசிலாந்த் நாட்டில் இன்று நடைபெற்ற பொது தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி நேரடியாக எதிர்கொண்டது. 

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டதில், தற்போதைய பிரதமர் ஜெசிந்தாவின் ஆளும் தொழிலாளர் கட்சி 49 சதவிகித வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி 27 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 120 இடங்களில், 64 இடங்களை பிரதமர் ஜெசிதாவின் ஆளும் கட்சி கைப்பற்றியது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா ஆர்டெர்ன் மகத்தான வெற்றியை பெற்று மீண்டும் பிரதமர் ஆனார்.

இந்த வெற்றி குறித்து பிரதமர் ஜெசிந்தா தெரிவிக்கையில், 'நாட்டை மீண்டும் நாம் கொரோனா நெருக்கடியிலிருந்து சிறப்பாக கட்டமைப்போம். கொரோனாவில் இருந்து மீள, அதற்கான செயல்களை வேகப்படுத்த நாங்கள் உறுதியாக உள்ளோம்' என்று  பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.

மீண்டும் பிரதமராக தேர்வாகியுள்ள ஜெசிந்தாவுக்கு உலகின் பல்வேறு தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new zealand pm election result


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->