அமெரிக்காவில் நேபாள மாணவி சுட்டுக்கொலை! - Seithipunal
Seithipunal


இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் அமரிக்கா கல்லூரியில் நேபாள மாணவியை துப்பாக்கி சூட்டில் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகர் குடியிருப்பு ஒன்றில் நேபாளத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி முனா பாண்டே வசித்து வந்துள்ளார். நேபாள நாட்டை சேர்ந்த இவர் கல்லூரியில் படித்து வந்து இருக்கிறார்.

இந்நிலையில், அந்த குடியிருப்பில் மாணவியை துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டு குண்டு காயங்களோடு கீழே  கிடந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தபோது, நேபாள மாணவி முனா உயிரிழந்து விட்டார்.

போலீசார் இந்த சம்பவம் குறித்து சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது, சம்பவ பகுதியில் இருந்து பாபி சின்ஹா ஷா (வயது 52) என்பவர் தப்பி சென்றது தெரியவந்துள்ளது. அவரை போக்குவரத்து நிறுத்தத்தில் வைத்து போலீசார் கைது செய்து உள்ளனர். முதல்கட்ட விசாரணையில் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என தெரியவந்தது.

மேலும் விசாரணையில், இந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்கான காரணம், உள்நோக்கம் போன்றவை பற்றிய விவரங்கள் தெரிய வரவில்லை. அதுபற்றி அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன்பின்னரே நேபாளத்தில் கல்லூரி மாணவி கொல்லப்பட்டதற்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nepali student shot dead in America


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->