ஜார்கண்ட் : பிறந்த குழந்தையை பூட்ஸ் காலால் மிதித்து கொன்ற போலீஸ் அதிகாரிகள் - 5 பேர் இடைநீக்கம்.!
near jarkhant six police officers suspend for trampled to new born baby kill
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரிதி மாவட்டத்தில் கோஷோதிங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் பூஷன் பாண்டே. இவர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் இவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த கைது வாரண்டை பூஷன் பாண்டேவிடம் கொடுபதற்காக ஆறு போலீசார் அவரது வீட்டிற்கு நேரில் சென்றுள்ளனர். அப்போது பூஷன் பாண்டேவின் வீட்டில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தை இருந்தது.

இதற்கிடையே பூஷண் பாண்டேவின் வீட்டிற்கு வந்த போலீசார்கள் சோதனை என்ற பெயரில் அராஜகம் செய்துள்ளனர். இதில் வீட்டில் இருந்த பச்சிளம் குழந்தை காவல்துறையினரின் பூட்ஸ் காலில் மிதி பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
இதையடுத்து, உயிரிழந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவில் குழந்தையின் உடல் உறுப்புகள் பூட்சால் நசுங்கியதில் உயிரிழந்தது தெரிய வந்தது. அதன் பின்னர் போலீசார் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் இரண்டு அதிகாரிகள் உள்பட ஆறு போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறு பேரும் அதிரடியாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இந்த கொடூர சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near jarkhant six police officers suspend for trampled to new born baby kill