பள்ளிகளில் பர்தா அணிய தடை - அதிரடி உத்தரவிட்ட கல்வித்துறை அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


பள்ளிகளில் பர்தா அணிய தடை - அதிரடி உத்தரவிட்ட கல்வித்துறை அமைச்சர்.!

பிரான்ஸ் நாட்டில் அரசு நடத்தும் பள்ளிகளில் இஸ்லாமிய பெண்கள் அணியும் தளர்வான, முழு நீளமான பர்தா எனப்படும் ஆடையை மாணவிகள் அணிவதற்கு தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:- "பிரான்ஸ் நாட்டில் 19ம் நூற்றாண்டு சட்டங்கள் பொதுக் கல்வியில் இருந்து பாரம்பரிய கத்தோலிக்க செல்வாக்கை நீக்கியதில் இருந்து அரசு பள்ளிகளில் மத அடையாளங்களுக்கு கடுமையான தடையை அமல்படுத்தியது. 

அதுமட்டுமல்லாமல், வளர்ந்து வரும் முஸ்லீம் சிறுபான்மையினரைக் கையாள்வதற்கான வழிகாட்டுதல்களையும் புதுப்பிக்க போராடியது. கடந்த 2004ம் ஆண்டில், பள்ளிகளில் முக்காடு அணிவதைத் தடைசெய்தது. 2010ம் ஆண்டில் பொது இடங்களில் முழு முகத்தை மூடுவதற்குத் தடை விதித்தது. 

இந்த தடை உத்தரவுகள் இஸ்லாமிய சமூகத்தில் சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பிரான்சில் மதச்சார்பின்மையைப் பாதுகாப்பது என்பது ஒரு பேரணியாக உள்ளது. 

இந்த நிலையில், "பள்ளிகளில் இனி அபாயா எனபது பர்தா அணிய முடியாது என்று முடிவு செய்துள்ளேன். நீங்கள் வகுப்பறைக்குள் செல்லும்போது, மாணவர்களைப் பார்த்து அவர்களின் மதத்தை நீங்கள் அடையாளம் காண முடியாது" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

muslims not wear abaya in france govt school


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->