அதிரடி அறிவிப்பு - ஒரே நம்பரில் 4 செல்போனில் வாட்ஸ் ஆப் பயன்படுத்த புதிய முறை.!
meta announce one whatsapp account connect 4 device new update
அதிரடி அறிவிப்பு - ஒரே நம்பரில் 4 செல்போனில் வாட்ஸ் ஆப் பயன்படுத்த புதிய முறை.!
பல கோடி மக்கள் பயன்படுத்தும் பிரபல வலைத்தளங்களில் ஒன்று வாட்ஸாப். இந்த வாட்ஸ் ஆப் கணக்கு முழுவதும், செல்ஃபோன் எண் அடிப்படையில் மட்டுமே இயங்குகிறது. இப்படி செல்போனில் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப் கணக்கை கணினி மூலம் இயக்கும் முறை ஏற்கனவே இருந்தது.
ஆனால், தற்போது நான்கு சாதனங்களில் வாட்சப்பை பயன்படுத்தும் வகையில் புதிய முறை ஒன்று வந்துள்ளது. இது தொடர்பாக, வாட்ஸ் ஆப்பின் தாய் நிறுவனமான மெட்டா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "மொத்தம் நான்கு சாதனங்கள் வரை ஒரே வாட்ஸ் ஆப் கணக்கை அணுக முடியும். முதலில் லாக் இன் செய்துள்ள சாதனத்தின் வாட்ஸ் ஆப் கணக்கை சைன் அவுட் செய்யாமலேயே, மற்ற சாதனங்களில் வாட்ஸ் ஆப் கணக்கைத் தொடரலாம்.
இந்த முறை, ஒன் டைம் பாஸ்வேர்ட் எனப்படும் ஓடிபி மூலமாக பயன்படுத்த முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட செல்ஃபோன் வைத்திருப்பவர்கள் ஒரே வாட்ஸ் ஆப் கணக்கு என்னை அனைத்து மொபைல் மூலமும் இயக்கலாம். செல்ஃபோன்களில் ஒன்றை விட்டுச் சென்றாலும், இதர செல்ஃபோன்கள் மூலம் வாட்ஸ் ஆப் கணக்குகளை தொடரலாம்.
அதுமட்டுமல்லாமல், வாட்ஸ் ஆப் பயன்பாடை ஒரு மொபைலில் விட்ட இடத்திலிருந்தே அடுத்த மொபைலில் தொடரவும் முடியும். இந்த புதிய அறிவிப்பு தனிப்பட்ட நபர்கள் மட்டுமன்றி சிறிய அளவில் வர்த்தகம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பேருதவியாக அமையும்" என்று அறிவித்துள்ளது.
English Summary
meta announce one whatsapp account connect 4 device new update