ஆஸ்திரேலியா தொடர்ந்து மலேசியாவிலும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை..! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவை தொடர்ந்து மலேசியாவிலும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா முதல் நாடாக, சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்து சட்டம் இயற்றியது. வரும் டிசம்பர் 10-ஆம் தேதி அமலாகும் இந்த சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட், திரெட்ஸ், டிக்டாக், எக்ஸ், யூடியூப், ரெடிட் உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால், கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கையை உலகின் பல நாடுகள் கவனித்து வருகின்றன. இதனையடுத்து, டென்மார்க் நாடும், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில்,  16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசியாவும் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மலேசியாவின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பாமி பட்சில் கூறியுள்ளதாவது:

''இளம் வயதினரை சைபர் மோசடிகள், முறைகேடுகள் மற்றும் பாலியல் சுரண்டலில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தோடு, 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பயனர்களின் வயதை உறுதி செய்ய அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் உள்ள ஆவணங்களை மின்னணு முறையில் பயன்படுத்துவது குறித்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பின்பற்றும் முறையை கடைபிடிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அரசு, அமைப்புகள் மற்றும் பெற்றோர் தங்கள் பணியை முறையாக செய்தால், மலேசியாவில் இணையதள சேவை என்பது குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். அதேநேரத்தில் எப்போது அமலுக்கு வரும் என அவர் கூறவில்லை. 2026-ஆம் ஆண்டு அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் டிஜிட்டல் தளங்களுக்கான கொள்கையின்படி 80 லட்சம் பயனர்களை கொண்ட சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் பரிமாற்ற செயலிகள் லைசென்ஸ் பெறுவது ஜனவரி மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி லைசென்ஸ் பெறுபவர்கள், வயது உறுதிச்சான்று, உள்ளடக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை விதிகளை செயல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Malaysia also bans those under 16 from using social media


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->