பெரும் சோகம்.. பயணிகள் பேருந்து மீது லாரி மோதி விபத்து 15 முதியவர்கள் பலி.!
Lorry and Bus accident 15 Oldman death
கனடாவில் உள்ள மனிடோபா மாகாணத்தில் முதியோர்களை அழைத்துக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கார்பெரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பேருந்து மீது ட்ரைலர் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 15 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி தெரிவிக்கையில் பேருந்தில் 25 பேர் பயணித்ததாகவும் 15 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அன்புக்குரியவர்களை இழந்தவர்ளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் துக்கத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை நான் உங்களுடன் இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Lorry and Bus accident 15 Oldman death