அந்த முட்டாள் இவர் தானா? இல்லை உண்மையிலேயே உங்களைப்போல் அறிவாளியா? எலான்  மஸ்க்கை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்! - Seithipunal
Seithipunal


ட்விட்டர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் புதிய CEO - வாக "லிண்டா யாக்கரினோ" என்ற பெண்ணை நியமித்துள்ளார் அதன்  உரிமையாளர் எலான் மாஸ்க்.

உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிவிட்டர் நிறுவனத்தை $54.20 மதிப்புள்ள பங்குகளுடன், தோராயமாக இந்திய மதிப்பில் ரூ3.30 லட்சம் கோடிக்கு வாங்கினார். 

பின்னர் எலான் மஸ்க் ட்விட்டரில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். முதல் கட்டமாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரியான (CEO) பாராக் அகர்வாலை பணியிலிருந்து நீக்கம் செய்தார். 

வெகு காலமாக டுவிட்டருக்கான சி.இ.ஓ. பதவி காலியாகவே இருந்த நிலையில், புதிய டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

அது யார் என்று பார்த்தால் ஒரு நாய் தான் அது என்றார். பின்னர் டிவிட்டரின் குருவி லோகோவை மாற்றுவது, புளூ  டிக்கிற்கு வசூல் செய்வது என்று ஒரு மாதிரி மனம் போக்கில் ஏதோதோ செய்து வந்தார்.

இந்நிலையில், ட்விட்டர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) "லிண்டா யாக்கரினோ" என்ற பெண்ணை நியமித்துள்ளார் எலான் மாஸ்க். இவர் இன்னும் 6 வாரத்தில் அவர் தனது பணியை தொடங்குவார் என்றும்  எலான்  மஸ்க் கூறியுள்ளார். 

முன்னதாக தனது ட்விட்டர் நிறுவனத்துக்கு ஒரு முட்டாளை தான் CEO-வாக பதவியில் அமர்த்துவேன் என்று எலான் மஸ்க் தெரிவித்த நிலையில், அந்த முட்டாள் இவர் தானா? இல்லை உண்மையிலேயே உங்களைப்போல் அறிவாளியா? என்று எலான்  மஸ்க்கை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Linda Yaccarino to be the new CEO of Twitter Elon Musk


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->