இந்திய மக்களுடன் எங்கள் நாட்டு மக்கள் துணை நிற்கின்றனர் - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமான இரங்கல்! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில், 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள சம்பவத்திற்கு, கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம், பாலசூர் மாவட்டம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலுடன், கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

கோரமண்டல் ரயில் பெட்டி மற்றொரு டிராக்கில் விழுந்ததில், அந்த ரயில் பெட்டி மீது பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது.

மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட இந்த விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட இந்த விபத்து சம்பவத்திற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், உலக நாடுகளின் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "ரயில் விபத்து குறித்த படங்களும் தகவல்களும் என் இதயத்தை நொறுக்குகின்றன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிப்பவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

காயமடைந்தவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த கடினமான சூழலில், இந்திய மக்களுடன் கனடா நாட்டு மக்கள் துணை நிற்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Justin Trudeau say about train crash in Odisha


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->